டூவீலர் திருட்டு
மேல்மருவத்துார்:அச்சிறுபாக்கம் அடுத்த முன்னக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகைவேல், 37. இவர், இரண்டு நாட்களுக்கு முன், மேல்மருவத்துார் ரயில்வே நிலையம் அருகே, அவருக்கு சொந்தமான ஸ்ப்ளெண்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, சென்னைக்கு சென்றுள்ளார்.பின், நேற்று வந்து பார்த்தபோது, வாகனம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அவர் அளித்த புகாரின் படி, மேல்மருவத்துார் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரிக்கின்றனர்.