உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டூவீலர்கள் அடாவடி பார்க்கிங் பேருந்து நிலையத்தில் இடையூறு

டூவீலர்கள் அடாவடி பார்க்கிங் பேருந்து நிலையத்தில் இடையூறு

திருப்போரூர்:திருப்போரூர் பேருந்து நிலையத்தை ஒட்டி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், இரு சக்கர வாகன நிறுத்துமிடம் உள்ளது.இது, தனியாருக்கு ஏலம் விடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இங்கு, தினமும், 150 முதல் 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.ஆனாலும், பல்வேறு கிராமங்களில் இருந்து திருப்போரூர் வந்து, அங்கிருந்து சென்னை செல்பவர்கள், வணிக கடைகளுக்கு வருபவர்கள் என பலரும், தங்களது வாகனங்களை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தாமல், பேருந்து நிலையத்தில் நிறுத்துகின்றனர்.இதனால், பேருந்துகள், பேருந்து நிலையத்தின் உள்ளே வரும் போதும், நிறுத்தப்படும் போதும் பெரும் சிரமத்தை சந்திக்கின்றன.பேரூராட்சி நிர்வாகம் சார்பில், விழிப்புணர்வு அறிவிப்பு பலகை, இரும்பு தடுப்பு அமைத்தாலும், இருசக்கர வாகனங்களை இடையூறாக நிறுத்திவிட்டுச் செல்வது தொடர்கிறது.எனவே, பேருந்து நிலையத்தில் இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ