உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பைக் மீது பஸ் மோதி வாலிபர்கள் இருவர் பலி

பைக் மீது பஸ் மோதி வாலிபர்கள் இருவர் பலி

வாலாஜாபாத்;வாலாஜாபாத் அருகே, பைக் மீது அரசு பேருந்து மோதியதில், வாலிபர்கள் இருவர் உயிரிழந்தனர். வாலாஜாபாத் ஒன்றியம், கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு, 23. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வின், 26, என்பவரும் நண்பர்கள். இருவரும் 'ஹீரோ பேஷன் ப்ரோ' பைக்கில், வாலாஜாபாத் சென்று நேற்று மதியம் 1:40 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சேட்டு வாகனத்தை ஓட்டினார். வெண்குடி சாலை வளைவு பகுதியில் வந்தபோது, காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் நோக்கி வந்த தடம் எண்: 79 அரசு பேருந்து, பைக் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த சேட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அஸ்வினை, அப்பகுதியினர் மீட்டு, '108' ஆம்புலன்ஸ் மூலம், காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாலை 3:00 மணியளவில் அஸ்வின் உயிரிழந்தார். விபத்து குறித்து, வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை