மேலும் செய்திகள்
ரூ.1.25 லட்சம் மதிப்பு பிளாஸ்டிக் பை பறிமுதல்
08-Jan-2025
மதுராந்தகம்:மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் என்பவரது மகன் ஜீவகுமார், 25.இவர், நேற்று இரவு, தனக்குச் சொந்தமான 'யமஹா ஆர்15' பைக்கில், மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்றுள்ளார்.அப்போது, மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்துார் பகுதியைச் சேர்ந்த வசந்த், 29, என்பவர், மதுராந்தகத்திலிருந்து ஜமீன் எண்டத்துார் நோக்கி, 'ஹீரோ ஹோண்டா ஸ்பிலெண்டர் பிளஸ்' பைக்கில் சென்றுள்ளார்.மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் மீது, எதிர்பாராத விதமாக, இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் மோதின.இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே ஜீவகுமார், வசந்த் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின், பிரேத பரிசோதனை முடிந்து, உறவினர்களிடம் அவர்களது உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.இந்த விபத்து குறித்து, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
08-Jan-2025