உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சூணாம்பேடு ஆரவல்லி நகரில் வடிகால் அமைக்க வலியுறுத்தல்

சூணாம்பேடு ஆரவல்லி நகரில் வடிகால் அமைக்க வலியுறுத்தல்

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆரவல்லி நகர் பகுதியில், 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் கால்வாய் வசதி இல்லாததால், மழைக்காலத்தில் குடியிருப்புப் பகுதி மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், சாலையில் பெருக்கெடுத்து, மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு சாலை மற்றும் சூணாம்பேடு - தொழுப்பேடு சாலைகளில் தேங்குகிறது.மேலும், சாலை முழுதும் சேறும், சகதியுமாக மாறி, போக்குவரத்து பாதிக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக சிரமப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆரவல்லி நகர் பகுதியில், சாலை ஓரத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !