உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஈச்சங்காடு காட்டுப்பகுதியில் சாலை சீரமைக்க வலியுறுத்தல்

ஈச்சங்காடு காட்டுப்பகுதியில் சாலை சீரமைக்க வலியுறுத்தல்

அச்சிறுபாக்கம்:ஈச்சங்காடு காட்டுப்பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென, பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கொங்கரை மாம்பட்டு ---சிறுதாமூர் செல்லும் சாலையில் பிரிந்து, காப்புகாடு வழியாக ஈச்சங்காடு, வடமணிப்பாக்கம், எட்டிப்பட்டு வழியாக ஒரத்தி செல்லும் சாலை உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் வெளியூர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்லவும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், ஒரத்தி மேல்நிலைப்பள்ளி மற்றும் திண்டிவனம் பகுதியில் உள்ள கல்லுாரிகளுக்கு செல்லவும், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். கொங்கரை மாம்பட்டு கிராமத்தில் இருந்து ஒரத்தி மருத்துவமனை மற்றும் நகர் பகுதிகளுக்கு செல்லும் மிக முக்கிய கிராம சாலையாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சென்னை போன்ற நகரங்களுக்கு காய்கறிகளை ஏற்றிச் செல்லும் மினி வேன்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால், சாலை குண்டும், குழியுமாகி, ஜல்லி கற்கள் பெயர்ந்து, வீணாகி உள்ளது. எனவே, சாலையை சீரமைக்க, வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ