உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பயனற்ற பழைய கை பம்ப்களால் திருக்கழுக்குன்றத்தில் இடையூறு

பயனற்ற பழைய கை பம்ப்களால் திருக்கழுக்குன்றத்தில் இடையூறு

திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றத்தில், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள, பயன்பாடற்ற குடிநீர் குழாய்களை அகற்ற வேண்டுமென, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருக்கழுக்குன்றத்தில், பொதுமக்களின் குடிநீர் தேவை கருதி, பேரூராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளுக்கு முன், தெருக்களில் இந்தியா மார்க் கை 'பம்ப்'களை அமைத்தது. பொதுமக்கள் கைகளால் இதை இயக்கி, நிலத்தடி நீரை பிடித்து குடிநீராக பயன்படுத்தினர்.நாளடைவில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நீர் நிரப்பி, தெருக்குழாய்கள் வாயிலாக வினியோகிக்கப்படுகிறது. வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது.இதன் காரணமாக, கை 'பம்ப்'கள் வழக்கொழிந்து, தற்போது பயன்பாட்டிலும் இல்லை. மேலும், தற்போது சாலை மட்டம் உயர்ந்துள்ளதால், இந்த பம்ப்கள் உயரம் குறைந்துள்ளது.அந்த வகையில், திருக்கழுக்குன்றம் அடிவார வீதி, மேட்டுத் தெரு உள்ளிட்ட பிரதான சாலைகளில் உள்ள இதுபோன்ற பம்ப்கள், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன.இருசக்கர வாகன ஓட்டிகள் மற்ற வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுக்கும் போது, இவற்றில் மோதி காயமடையும் அபாயம் உள்ளது. எனவே, பயன்பாடற்ற கை பம்ப்களை அகற்ற வேண்டுமென, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை