உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  வாளோடை-- -அணைக்கட்டு சாலை விரிவாக்கம்

 வாளோடை-- -அணைக்கட்டு சாலை விரிவாக்கம்

கூவத்துார்: வாளோடை -- அணைக்கட்டு இடையே செல்லும் மாநில நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. வாளோடை பகுதியில் இருந்து அணைக்கட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. பச்சம்பாக்கம், தொண்டமநல்லுார், அணைக்கட்டு, பரமேஸ்வர மங்கலம் உள்ளிட்ட கிராம மக்கள் காத்தான் கடை செல்வதற்கு இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். இச்சாலை குறுகலாக உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மாநில நெடுஞ்சாலை துறை இந்த சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து, டெண்டர் விடப்பட்டது. இதையடுத்து, சாலை விரிவாக்க பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ