உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலுார் குட்டையில் குப்பை சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலம்

வண்டலுார் குட்டையில் குப்பை சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலம்

கூடுவாஞ்சேரி,:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலாஜி அவென்யூ, தனலட்சுமி நகர் செல்லும் சாலையில், வண்டலுார் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு உள்ளது.அதன் அருகில் உள்ள குட்டையில், எப்போதும் நீர் இருந்து கொண்டிருக்கும். இந்நிலையில், தற்போது பெய்த மழையில், இந்த சிறிய குட்டையில் மழை நீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.இதில், சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பையை, குட்டையின் கரையோரம் வீசி செல்கின்றனர்.கால்நடைகள் குப்பையை கிளறியும், காற்றில் அடித்து வீசப்படுவதாலும், குளத்தில் உள்ளே விழுந்து, நீரில் தேங்கியுள்ளது. அதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதோடு, குளத்தின் நீர் பச்சை நிறமாக மாறியுள்ளது.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:வண்டலுாரில் உள்ள சிறிய குட்டையில், இப்பகுதியை சேர்ந்த கால்நடைகள் நீர் அருந்தி செல்வது வழக்கம். தற்போது, இந்த குளம் முழுதும் குப்பை தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளது.இது குறித்து, ஊரப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அருகிலேயே, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இருந்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.குளத்தில் தேங்கியுள்ள குப்பையை அகற்றி, குளத்தை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை