உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வாகனம் கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

வாகனம் கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

மதுராந்தகம்:தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து குறித்து, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, வாகன கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.அதன்படி, மதுராந்தகம் உப கோட்டம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, அனைத்து வகை வாகனங்களையும் கணக்கெடுக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது.நேற்று முதல், ஒரு வார காலத்திற்கு, இப்பணி நடைபெறுகிறது.இதில் மதுராந்தகம் புறவழி சாலை, காந்தி நகர் சாலை, மதுராந்தகம் -- சித்தாமூர் சாலை, கூவத்துார் சாலை, பவுஞ்சூர் சாலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகின்றன.இப்பணியில், ஒரு மையத்திற்கு இரண்டு ஊழியர்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை