உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூரில் 2 இடங்களில் வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு

திருப்போரூரில் 2 இடங்களில் வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு

திருப்போரூர், திருப்போரூர் பகுதிகளில் இரண்டு இடங்களில், சாலை மேம்பாட்டு பணிகளுக்காக, வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.திருப்போரூர் ஒன்றியத்தில், ஓ.எம்.ஆர்., சாலை, இ.சி.ஆர்., சாலை, செங்கல்பட்டு சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை என, முக்கிய சாலைககள் உள்ளன. இச்சாலைகளில் தினமும் ஏராளமான வானங்கள் செல்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, முக்கிய சாலைகளில் வாகனங்கள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.அதன் அடிப்படையில் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப சாலையை அகலப்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள், நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன.அதன்படி, திருப்போரூரில் ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் செங்கல்பட்டு சாலை ஆகிய இரண்டு இடங்களில், கடந்த மூன்று நாட்களாக நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, வாகனங்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த கணக்கெடுப்பு பணியில் ஒரு இடத்துக்கு, இரண்டு பேர் வீதம் பணியமர்த்தப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதில், சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், பேருந்துகள், லாரிகள், டிப்பர் போன்ற கனரக வாகனங்கள் இயக்கம் குறித்து கணக்கெடுத்து, தனித்தனியாக பதிவு செய்கின்றனர்.இந்த பணிகளை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.இந்த கணக்கெடுப்புக்குப் பின், அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கப்படும். இதற்கடுத்து சாலை மேம்படுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் தடுக்கப்பட்டு, விபத்துகளும் தடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ