உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாநில வாலிபால் போட்டி வேலம்மாள் பள்ளி முதலிடம்

மாநில வாலிபால் போட்டி வேலம்மாள் பள்ளி முதலிடம்

சென்னை: மாநில அளவில், சி.பி.எஸ்.இ., பள்ளி களுக்கு இடையே நடந்த வாலிபால் போட்டியில், சென்னை வேலம்மாள் பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஸ்ரீமதி சுந்தரவள்ளி நினைவு பள்ளி சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளி களுக்கு இடையிலான, ஆறாவது மாநில ' கிளஸ்டர்' வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, புதுபெருங் களத்துாரில் நடந்தது. இதில், மாநிலம் முழுதும் இருந்து, 128 பள்ளி அணிகள் பங்கேற்றன. போட்டிகள், 14, 17, 19 வயதுக்கு உட்பட்டு, நாக் - அவுட் முறையில் நடந்தன. இதன், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவின் இறுதி போட்டியில், வேலம்மாள் வித்யாலயா மேற்கு அணியும், வேலம்மாள் வித்யாலயா ஆலப்பாக்கம் அணியும் மோதின. விறுவிறுப்பான இப்போட்டியில், வேலம்மாள் வித்யாலயா ஆலப்பாக்கம் அணி 25 - 10, 25 - 23 என்ற செட் கணக்கில், வேலம்மாள் வித்யாலயா மேற்கு அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மேலும், அடுத்த மாதம் உத்தரபிரதேசத்தில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ