உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் வேண்பாக்கம் கிராமத்தினர் தவிப்பு

 சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் வேண்பாக்கம் கிராமத்தினர் தவிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த வேண்பாக்கம் கிராமத்தில், சாலையில் கழிவுநீர் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதால், கிராம மக்கள் தவித்து வருகின்றனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியிலுள்ள வேண்பாக்கம் கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வணிக கட்டடங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தெருவில் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் செல்ல வாய்க்கால் வசதி இல்லாததால், பல தெருக்களில் இதுபோல் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. செங்கல்பட்டு -- மதுராந்தகம் சாலையின் ஓரம் உள்ள மழைநீர் கால்வாய் மற்றும் சிறு பாலங்கள், மண் குவிந்து துார்ந்து போய் உள்ளன. இதனால் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே, வேண்பாக்கம் கிராமத்தில் கழிவுநீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை