உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்மாற்றியை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மின்மாற்றியை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

பவுஞ்சூர்:அணைக்கட்டு கிராமத்தில் பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பவுஞ்சூர் அடுத்த அணைக்கட்டு கிராமத்தில், 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடுகுப்பட்டு துணைமின் நிலையத்தின் வாயிலாக மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. அணைக்கட்டு காலனி முத்தாலம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி கடந்த ஓராண்டாக பழுதடைந்துள்ளதால், குறைந்த மின்னழுத்தம் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் மின்சாதன வீட்டு உபயோகப் பொருட்கள் அடிக்கடி பழுதடைவதால் மின் மாற்றியை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலை 8:00 மணிக்கு காத்தான்கடை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அணைக்கட்டு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, மின்மாற்றியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை