உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி அகற்ற கிராம மக்கள் கோரிக்கை

 ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி அகற்ற கிராம மக்கள் கோரிக்கை

பவுஞ்சூர்:தட்டாம்பட்டு ஊராட்சியில் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்வாய் பாளையம் அடுத்த தட்டாம்பட்டு ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்ப்பட்டு வருகிறது. இதில், தட்டாம்பட்டு, பெருமாள்சேரி போன்ற பகுதிகளில் உள்ள மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நீர்த்தேக்க தொட்டியின் துாண்கள், அடிப்பகுதி, சுற்றுப்புற சுவர்களில் விரிசல் விழுந்து காணப்படுகிறது. 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து, குடிநீர் தொட்டி விழும் நிலையில் உள்ளது. மேலும் பள்ளி வளா கத்தை ஒட்டி, ஊராட்சி மன்ற அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் விளையாடும் போதும், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருவோர் மீதும் அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி விட்டு, வேறு இடத்தில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ