உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிய பஸ் நிழற்குடை அமைக்க புறங்கால் கிராமத்தினர் கோரிக்கை

புதிய பஸ் நிழற்குடை அமைக்க புறங்கால் கிராமத்தினர் கோரிக்கை

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் ஒன்றியம், புறங்கால் ஊராட்சியில், ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.அச்சிறுபாக்கத்தில் இருந்து தொழுப்பேடு வழியாக ஒரத்தி, வந்தவாசி, காஞ்சிபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.இதில், புறங்கால் ஊராட்சி வழியாக அன்னங்கால், கூனங்கரணை, ராஜாம்பாளையம், எலப்பாக்கம் வரை செல்லும் சாலை உள்ளது.இந்த சாலையில், புறங்கால் கிராம மக்கள் பயன்பாட்டிற்காக, 20 ஆண்டுகளுக்கு முன் பேருந்து பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.தற்போது, இந்த பயணியர் நிழற்குடையில் விரிசல் ஏற்பட்டு, சில பகுதிகள் இடிந்து விழுந்து வருகின்றன.நிழற்குடை பயன்படுத்த முடியாதபடி உள்ளதால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், மரத்தடி நிழலில் காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர்.எனவே, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, விழும் நிலையிலுள்ள பயணியர் நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்தி, அங்கு புதிதாக நிழற்குடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை