உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நல்ல பாலத்தை இடித்து புதிய பாலம் அதிகாரிகள் செயலுக்கு கிராமத்தினர் எதிர்ப்பு

நல்ல பாலத்தை இடித்து புதிய பாலம் அதிகாரிகள் செயலுக்கு கிராமத்தினர் எதிர்ப்பு

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த தென்னம்பட்டு கிராமத்தில், நல்ல நிலையில் உள்ள பாலத்தை இடித்து விட்டு, புதிதாக பாலம் கட்ட அதிகாரிகள் முற்படுவதால், கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மதுராந்தகம் ஒன்றியம், புளியரணங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது, தென்னம்பட்டு கிராமம்.புளியரணங்கோட்டையில் இருந்து தென்னம்பட்டு கிராமத்திற்கு செல்லும் சாலையின் இடையே, மதுராந்தகம் ஏரியிலிருந்து உயர் மட்ட கால்வாய் வழியாக அருங்குணம், தேவதுார் உள்ளிட்ட, 30 ஏரிகளுக்கு நீர் செல்லும் கால்வாய் உள்ளது.இந்த கால்வாய் மீது, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சதுர வடிவ பாலம், தற்போது நல்ல நிலையில் உள்ளது.ஆனால், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி பொறியாளர்கள் உரிய ஆய்வு செய்யாமல், நல்ல நிலையில் உள்ள இந்த பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக பாலம் அமைக்க, முதற்கட்ட பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இதையறிந்த கிராம மக்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தென்னம்பட்டு கிராமத்தினர் கூறியதாவது:தென்னம்பட்டு பகுதியில் உயர்மட்ட கால்வாய் மீது அமைக்கப்பட்ட சதுர வடிவ பாலம், நல்ல நிலையில் உள்ளது.பாலத்தின் தடுப்பு கட்டைகளை மட்டுமே சீரமைக்க வேண்டும்.ஆனால், பொறியாளர்கள் உரிய ஆய்வு செய்யாமல், பல லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக பாலம் அமைக்க முதற்கட்ட பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.அந்த நிதியில் பலதரப்பினரும் பயன்பெறும் வகையில், தென்னம்பட்டில் இருந்து முதுகரை, பவுஞ்சூர் செல்லும் மண் சாலையை, சிமென்ட் சாலையாக அமைக்க வேண்டும்.அரசு நிதியை வீண் செய்யாமல், பயனுள்ள திட்டங்களை செயல்படுத்த, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை