மேலும் செய்திகள்
ரூ.15 கோடி மதிப்புள்ள அரசு இடம் மீட்பு
03-Apr-2025
திருப்போரூர்:கேளம்பாக்கம் அருகே தாழம்பூர் ஊராட்சி உள்ளது. நேற்று இங்கு, அரசுக்குச் சொந்தமான 3.14 ஏக்கர் இடத்தை, பெண் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.அந்த இடத்தில், அவரவருக்கு ஏற்றார் போல் இடத்தை மடக்கும் முயற்சியில் இறங்கினர்.அந்நேரத்தில், ரோந்து பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் சென்று விசாரித்த போது, அப்பெண் ஆக்கிரமித்துள்ள இடத்தில், தங்களுக்கு தலா 2 சென்ட் இடம் வழங்கும்படி கூறியுள்ளனர்.இதுகுறித்து போலீசார் வருவாய்த் துறைக்கும், தாழம்பூர் ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் வந்த பின், அங்கு குவிந்திருந்த மக்களை போலீசார் வெளியேற்றினர்.பின், முதற்கட்டமாக வருவாய்த்துறை அதிகாரிகள், அந்த இடத்தின் நுழைவு கேட்டை மூடி, சங்கிலியால் பூட்டு போட்டனர்.அதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர், அருகே உள்ள தாழம்பூர் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று முறையிட்டனர். வாடகை வீட்டில் வசித்து வரும் தங்களுக்கு, மேற்கண்ட இடத்தில் தலா 2 சென்ட் இடம் வழங்க வலியுறுத்தினர். ஒரு மணி நேரம் காத்திருந்து, பிறகு அங்கிருந்து கலைந்தனர். இந்த இடத்தின் மதிப்பு, 50 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
03-Apr-2025