உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முகவரி பட்டியலில் தன்னார்வலர் பதிவு செய்யலாம்

முகவரி பட்டியலில் தன்னார்வலர் பதிவு செய்யலாம்

செங்கல்பட்டு:மாவட்ட முகவரி பட்டியலில் இணைக்க விருப்பமுள்ள, தன்னார்வ நுகர்வோர் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து, கலெக்டர் சினேகா அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், மாவட்ட முகவரி பட்டியலில் இணைக்க விருப்பம் உள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் உரிய படிவத்தை பெற்று, வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.மாவட்ட முகவரி பட்டியலில் இணைக்க விரும்பும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் அரசியல் சார்பற்றதாக இருக்க வேண்டும். குறைந்தது 20 சதவீதம் பெண் உறுப்பினர்கள் அமைப்பில் இருக்க வேண்டும்.உறுப்பினர்கள் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றிருக்கக் கூடாது. அமைப்பின் வரவு - செலவு கணக்குகள், தகுதி வாய்ந்த அதிகாரியால் தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் சேவை செய்திருக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி