செங்கல்பட்டு: செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில், எஸ்.ஐ. ஆர்., பணிகளின் உதவி மையங்களில் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. செங்கல்பட்டு சப்- கலெக்டர் மாலிதி ெஹலன் வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஊரகப்பகுதிகளில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி தொடர்பாக, உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மையங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக மனுக்களை அளித்து பயன்பெறலாம். சட்டசபை தொகுதியில், காயரம்பேடு, கருநீலம், சிங்கபெருமாள் கோவில், கொண்டமங்கலம், பட்ரவாக்கம், அஞ்சூர், குண்ணவாக்கம், சென்னேரி, ஆப்பூர், வில்லியம்பாக்கம், பாலுார், மேலமையூர், வல்லம், ஆலப்பாக்கம், ஒழலுார், பழவேலி, ஆத்துார், வெங் கடாபுரம் ஆகிய ஊராட்சிகளில், ஊராட்சி அலுவலகங்கள். சிங்கபெருமாள்கோவில் தொடக்கப்பள்ளி, மலையடி வேண்பாக்கம், திருத்தேரி ஆகிய பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளிகள். வேதநாராயணபுரம், தென்மேல்பாக்கம், பரனுார் ஆகிய கிராமங்களில் உள்ள, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள். பாரேரியில் மகளிர் சுய உதவி கட்டடம், திம்மாவரம் சமுதாய கூடம் ஆகிய பகுதிகளில், உதவி மையங்களில், சிறப்பு முகாம், நடந்து வருகிறது. தினமும், காலை 8:00 மணி இரவு 7:00 மணி நடக்கும் மு காமை பயன்படுத்தி, வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை வழங்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.