உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

கிளாம்பாக்கம்:குடிநீர் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள், முறையான தயாரிப்பில் ஈடுபட வலியுறுத்தி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சார்பில், கிளாம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று, விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நியமன அலுவலர் அனுராதா தலைமை தாங்கினார்.உணவு பாதுகாப்பு துறை துணை இயக்குனர் சித்ரசேனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் அதிகாரிகள் கூறியதாவது:பிளாஸ்டிக் கேன் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை தயாரிக்கும் உற்பத்தியாளர்கள், தரமாக தயாரிக்க வேண்டும்.கேன்களில் தண்ணீர் இருப்பது பொதுமக்களின் பார்வைக்கு 85 சதவீதத்துக்கு மேல் தெளிவாக தெரிய வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து எந்த ஒரு புகாரும் வரக்கூடாது.கடைகளில் விற்கப்படும் குடிநீர் பாட்டில் மற்றும் கேன்களில் காலாவதியான தேதி இருந்தாலோ அல்லது சுகாதாரமற்ற முறையில் இருந்தாலோ 9444042322 என்ற வாட்ஸாப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி