கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு கலெக்டர் ஆபீசில் நீர் மோர் விநியோகம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், கோடை காலத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் பணி, துவங்கியது.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அலுவலகம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட தொழில் மையம், முதன்மை கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த அலுவலகங்களுக்கு பல்வேறு தேவைக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.எனவே, கோடை காலத்தை முன்னிட்டு, கலெக்டர் அலுவலகம் வரும் பொதுமக்களுக்கு, தினமும் நீர் மோர் வழங்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, கலெக்டர் வளாகத்தில் நீர், மோர் வழங்கும் நிகழ்ச்சியை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இப்பணியில், மகளிர் திட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்படுவர் என, மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.