குடிநீர் சுத்திகரிப்பு மையம் கொக்கிலமேடில் திறப்பு
மாமல்லபுரம்:கொக்கிலமேடில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மையம், மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கப்பட்டது. மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி, கொக்கிலமேடு அம்பேத்கர் நகர் பகுதியில், குடிநீர் தேவை கருதி குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க, சென்னை அணுமின் நிலைய நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. இதை பரிசீலித்த அணுமின் நிலைய நிர்வாகம், சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், 16 லட்சம் ரூபாய் மதிப்பில், 3,000 லிட்டர் கொள்ளளவு கலனுடன், ஒரு மணி நேரத்தில் 1,000 லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் மையத்தை அமைத்தது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், அணுமின் நிலைய இயக்குநர் சேஷையா, இந்த குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை, மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.