உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மெல்ரோசாபுரத்தில் பாலாற்று குழாய் உடைந்து குடிநீர் வீண்

மெல்ரோசாபுரத்தில் பாலாற்று குழாய் உடைந்து குடிநீர் வீண்

மறைமலை நகர்:கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் பாலாற்றில் இருந்து மறைமலை நகர் கூட்டு குடிநீர் திட்டம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.தமிழ்நாடு குடிநீர் வாரியம் செயல்படுத்தும் இந்த திட்டதில், பாலாற்றில் தண்ணீர் எடுக்கப்பட்டு குழாய் வழியாக திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் நீரேற்ற நிலையத்திற்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது.இந்த பகுதியில் இருந்து நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையின் அடியில் குழாய் பதித்து திருக்கழுக்குன்றம் தீயணைப்பு நிலையம், மறைமலை நகர் நகராட்சி பகுதிகள், மறைமலை நகர் பகுதியில் உள்ள ஊரக வளர்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் செல்கிறது.சிங்கபெருமாள் கோவில் அடுத்த மெல்ரோசாபுரம் திருச்சி - சென்னை - தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு சாலை நடுவே குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நீண்ட நாட்களாக வெளியேறி வீணாகி வருகிறது.இதனால் இணைப்பு சாலையில் இரும்பு தடுப்பு வைக்கப்பட்டு உள்ளதால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இணைப்பு சாலையை பயண்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை