உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஒரே இடத்தில் வீடு வழங்கணும்

ஒரே இடத்தில் வீடு வழங்கணும்

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன், தொண்டு நிறுவனம் சார்பாக கட்டித்தரப்பட்ட வீட்டில் வசித்து வருகிறோம். தற்போது வசித்து வரும் பகுதி, மேய்க்கால் புறம்போக்கு வகைப்பாட்டைச் சேர்ந்தது என்பதால், புதிதாக பட்டா பெற முடியாமல் அவதிப்படுகிறோம். வருவாய்த் துறையினர் மாற்று இடத்தில் பட்டா வழங்க ஏற்பாடு செய்தால், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தற்போது வரை வீட்டுமனை இல்லாமல், பழுதடைந்த வீட்டில் குடும்பத்துடன் அவதிப்பட்டு வருகிறோம். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இடைக்கழிநாடு பகுதியில் வசிக்கும் அனைத்து இருளர்களுக்கும், ஒரே இடத்தில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆ.முருகன், சேம்புலிபுரம், கடப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை