மேலும் செய்திகள்
போதை மாத்திரை பதுக்கி விற்ற நான்கு பேர் கைது
29-Mar-2025
சென்னை, அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஆவடி, கோணாம்பேடு பகுதியில், நேற்று காலை கண்காணித்தனர்.அங்கு கட்டுமானம் நடைபெறும் பகுதியில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மோஜம்மல் ஹோக், 21, என்பவர், ரயிலில் 'ஹெராயின்' போதைப் பொருள் கடத்தி வந்து விற்பது தெரிந்தது.அவரிடம் இருந்து, 20,000 ரூபாய் மதிப்பிலான 9 கிராம் ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்து, நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.2 பேர் கைதுஐஸ்ஹவுஸ் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் கிருஷ்ணாம்பேட்டை மயான பூமி அருகே கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற இருவரை பிடித்து சோதனை செய்தபோது, 2.5 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் சிக்கியது.விசாரணையில், வியாசர்பாடியைச் சேர்ந்த கார்த்திகேயன், 27, சந்தோஷ், 20, என தெரிந்தது. நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
29-Mar-2025