உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கரும்பாக்கம் ஊராட்சிக்கு இடைத்தேர்தல் எப்போது?

கரும்பாக்கம் ஊராட்சிக்கு இடைத்தேர்தல் எப்போது?

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திற்கு கடந்த 2021ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 50 ஊராட்சி தலைவர்கள், பதவியேற்று மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். இதில், கரும்பாக்கம் ஊராட்சி தலைவர், உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இறந்தார். இதனால், கரும்பாக்கம் ஊராட்சியில் மட்டும், தலைவர் பதவி காலியாக உள்ளது.தற்போது, ஊராட்சி தலைவர் பதவிக்கான அதிகாரம், துணை தலைவருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.ஊராட்சி தலைவர் இடைத்தேர்தலை, ஆறு மாதங்களில் மாநில தேர்தல் கமிஷன் நடத்த வேண்டும். ஆனால், தேர்தல் நடத்தாமல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை இடைத்தேர்தல் நடத்தாமல், மாநில தேர்தல் கமிஷன் மெத்தனமாக இருந்து வருகிறது.எனவே, ஊராட்சி நிர்வாக நலனுக்காக, விரைந்து தேர்தலை நடத்த வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, திருப்போரூர் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக, மாநில தேர்தல் கமிஷனிடம் இருந்து எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. தற்காலிக தலைவரின் பதவிக்காலம் ஆறு மாதம் வரை. இந்த ஆறு மாதம் முடியும் போது, 10 நாட்களுக்கு முன்னதாக தற்காலிக தலைவர், பதவிக்காலம் முடிவதாகக் கூறி எங்களிடம் கடிதம் வழங்குவார்.அவர் வழங்கவில்லை என்றாலும் நாங்கள் 10 நாட்களில் பதவிக்காலம் முடிவடைவதாகக் கூறி, மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி விடுவோம்.மீண்டும் ஆறு மாதம் நீட்டிக்கப்படும். இவ்வாறு ஆறு, ஆறு மாதமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. இடைத்தேர்தல் நடத்துவது பற்றி உத்தரவு வந்தால், தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை