உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அனந்தமங்கலத்தில் இருளர்களுக்கு வீடு கட்டுமான பணி துவங்குவது எப்போது?

அனந்தமங்கலத்தில் இருளர்களுக்கு வீடு கட்டுமான பணி துவங்குவது எப்போது?

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனந்தமங்கலம் ஊராட்சியில், 25க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு நிரந்தர வீடுகள் இல்லாததால் விவசாயம் மற்றும் கூலி வேலைகளுக்கு, பல்வேறு கிராமங்களுக்குச் சென்று, அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர்.இவர்கள், ஓலை குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.இதில், 16 இருளர் குடும்பங்களுக்கு, வீட்டுமனை பட்டா இல்லாமல் இருந்தது.இந்நிலையில், பிரதம மந்திரியின்,'ஜன்மன்' திட்டத்தில், 5.7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், பட்டா இல்லாத காரணத்தால், கட்டுமான பணிகள் துவக்கப்படாமல் இருந்தன.தற்போது, இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளதால், வீடு கட்டும் பணிகளை விரைந்து துவக்க ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை