உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பனையூரில் குடிநீர் நிலையம் திறப்பது எப்போது?

பனையூரில் குடிநீர் நிலையம் திறப்பது எப்போது?

செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு, பனையூர் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்களுக்கு பேரூராட்சி வாயிலாக, செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 9.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக்கிணறு அமைத்து, 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கடந்த 2 மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. ஆனால், இன்னும் செயல்படாமல் உள்ளது.எனவே, புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !