உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பூயிலுப்பையில் அமைக்கப்படுமா?

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பூயிலுப்பையில் அமைக்கப்படுமா?

திருப்போரூர்:பூயிலுப்பை கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருப்போரூர் அடுத்த பூயிலுப்பை கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு, ஊராட்சி நிர்வாகம் வாயிலாக வழங்கப்படும் குடிநீர், உவர்ப்பு சுவையாக உள்ளது. இதனால், இப்பகுதியில் வசிப்போர் அவதிப்பட்டு வருகின்றனர். கிராமத்தினர் பலர், பணம் கொடுத்து, 'கேன்' தண்ணீரை வாங்கி குடித்து வருகின்றனர். வசதியில்லாதவர்கள், 1 கி.மீ., வரை சென்று, திருப்போரூர் - செங்கல்பட்டு சாலை, முத்துமாரியம்மன் கோவில் அருகே உள்ள பொது குழாயில் குடிநீர் பிடித்து வருகின்றனர். எனவே, பூயிலுப்பை கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை