செங்கை கலெக்டர் அலுவலக பகுதியில் மின்விளக்கு பயன்பாட்டிற்கு வருமா?
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் பகுதியில், புதிய உயர்கோபுர மின் விளக்கு பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என,மக்கள் வலியுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில், ஆலப்பாக்கம் ஊராட்சியில், வேதநாராயணபுரம் பகுதியில், ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலக வளாகம் அமைந்துள்ளது. இங்கு, கலெக்டர் அலுவலம், மாவட்ட வருவாய் அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங் களு க்கு தினமும், அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் வந்து செல்கின்றனர். மாலை நேரத்தில் ஊழியர்கள் வீடு திரும்புகின்றனர். மேற்கண்ட அலுவலகம் பகுதியில், மின் விளக்கு இல்லாததால், திருட்டு, வழிபறி, சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெறும் சூழல் உள்ளது. இதை தவிர்க்க, உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பின், காஞ்சிபுரம் எம்.பி,, தொகுதி நிதியிலிருந்து, கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் செல்லும் பகுதியில், தலா ஒரு உயர்கோபு மின் விளக்கு அமைக்க, 15 லட்சம் ரூபாய் நிதியை, எம்.பி., ஒதுக்கீடு செய்து, கலெக்டருக்கு, கடந்த அக்., மாதம் அனுப்பி வைத்தார். இதை செயல்படுத்த, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார். எனவே, மக்கள் நலன்கருதி, உயர்கோபுர மின் விளக்கு பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.