உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  மாமல்லபுரத்தில் அபாய மரம் அகற்றப்படுமா?

 மாமல்லபுரத்தில் அபாய மரம் அகற்றப்படுமா?

மா மல்லபுரம் கடற்கரை கோவில் அருகில், மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமத்தின் வணிக வளாகத்துடன் கூடிய வாகன நிறுத்துமிடம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணியர் கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துகின்றனர். வியாபாரிகள் கடை நடத்து கின்றனர். இங்குள்ள காட்டுவாகை மரம் பட்டுப்போன நிலையில், அதன் கிளைகள் காற்றில் முறிந்து கீழே விழுகின்றன. மக்கள் அதிகம் கூடும் நேரத்தில் மரம் விழுந்தால், அசம்பாவிதம் ஏற்படும். இந்த மரம் விழும் நிலையில் உள்ளதால், அப்பகுதியை கடந்து செல்வோர் அச்சப்படுகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன், மரத்தை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கதிர்வேலவன், மாமல்லபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி