உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குப்பை குவியலால் மாசடையும் நீர்நிலைகள் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

குப்பை குவியலால் மாசடையும் நீர்நிலைகள் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

மறைமலை நகர், செங்கல்பட்டு சுற்று வட்டாரத்தில் தொழிற்சாலை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருகிறது. தொழிற்சாலை கழிவுகள் நீர்நிலைகள் வனப்பகுதிகளில் கொட்டப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கை புறநகர் பகுதி களில் மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், ஊரப்பாக்கம் வண்டலுார், மண்ணிவாக்கம் உள்ளிட்டபகுதிகள் நாளுக்குநாள்வளர்ந்து வரும் முக்கிய பகுதிகளாக உள்ளன.மறைமலை நகர், மகேந்திரா சிட்டி, ஒரகடம்,சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வெளி மாவட்டத்தை சேர்ந்தோர் இந்த பகுதிகளில் வீட்டு மனைகள் வாங்கி குடி பெயர்ந்து வருகின்றனர்.இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து அகற்றப்படும் குப்பை மற்றும் கழிவு பொருள்கள் முறையாக சுத்திகரிப்பு செய்யப்படாமல் சுற்றியுள்ள நீர்நிலைகளிலும் வனப் பகுதி, நெடுஞ்சாலைகளில் மூட்டை மூட்டைகளாக கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன.காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் 64 ஏரிகள் உள்ளன. இதில் மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களின் ஏரிகளில் உள்ளாட்சி அமைப்புகளே குப்பை கொட்டுகின்றன.இதனால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது. சிங்கபெருமாள் கோவில் ஏரி, திருத்தேரி, ஓமலுார் ஏரி, கொளத்துார் ஏரி, காட்டாங்கொளத்துார் ஏரிகள் மாசடைந்து வருகின்றன.இந்த ஏரிகளில்ஆழ்துளை மற்றும் திறந்தவெளி பொது கிணறு அமைத்து உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் வினியோகமும் செய்து வருகின்றன.இதனால் அவர்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே நீர்நிலைகளை மாவட்ட நிர்வாகம் முறையாக கண்காணிக்க வேண்டும் என, சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ