மேலும் செய்திகள்
வர்ணம் பூசாத வேகத்தடை
16-Oct-2024
சித்தாமூர்:சித்தாமூரில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மற்றும் செய்யூர் - போளூர் செல்லும் இரண்டு மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பில், தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.சாலை சந்திப்பில் விபத்து ஏற்படுவதை தடுக்க, மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு சாலையில், இரண்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.கடந்த ஆண்டு, செய்யூர் - போளூர் சாலை விரிவாக்கப்பணி நடந்தபோது, சித்தாமூர் சாலை சந்திப்பும் விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கப் பணியின்போது, சாலையில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன.தற்போது, சாலைப் பணிகள் முடிந்துள்ள நிலையில், புதிய வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சித்தாமூர் சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
16-Oct-2024