பெண்ணிடம் செயின் வழிப்பறி
திருக்கழுக்குன்றம்: பெண்ணிடம் செயின் பறித்து தப்பிய வாலிபரை, போலீசார் தேடுகின்றனர். திருக்கழுக்குன்றம் கானகோவில்பேட்டையைச் சேர்ந்தவர் பவித்ரா, 25. இவர் நேற்று காலை 6:30 மணியளவில், திருக்கழுக்குன்றம் கிரிவல பாதையில் நடைபயிற்சி சென்றார். அங்கு நடந்து சென்ற முகமூடி அணிந்த நபர், பவித்ரா அணிந்திருந்த 6 கிராம் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து பவித்ரா, திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.