உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடப்பேரி ஏரியை ரூ.60 லட்சத்தில் சீரமைக்கும் பணி துவக்கம்

கடப்பேரி ஏரியை ரூ.60 லட்சத்தில் சீரமைக்கும் பணி துவக்கம்

தாம்பரம்:மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. 80 ஏக்கர் பரப்பளவு உடைய இவ்வேரி, ஆக்கிரமிப்பால், 65 ஏக்கராக சுருங்கிவிட்டது. இந்த ஏரியை நம்பி, கடப்பேரி பகுதியில் விவசாயம் நடந்து வந்தது.இப்பகுதியில் 1984ல் மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் வந்த பிறகு, விவசாய நிலம் குறைந்தது. அதன்பின், இவ்வேரி நிலத்தடி நீர் மட்டத்திற்கு மட்டுமே பயன்பட்டது. இதை பயன்படுத்தி, மேற்கு தாம்பரம் பகுதிகளில் உள்ள குடியிருப்பு, உணவு விடுதிகள், மருத்துவமனை, பேருந்து டிப்போ ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலந்து, தண்ணீரின் நிறம் பச்சையாக மாறிவிட்டது.'இதனால், சுற்றியுள்ள பகுதியினருக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஏரி நீரை வெளியேற்றி, துார்வாரி ஆழப்படுத்த வேண்டும்' என்று, அப்பகுதியினர் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். இந்த நிலையில், ரோட்டரி சங்கம் - எக்ஸ்னோரா இணைந்து, 60 லட்சம் ரூபாய் செலவில் இவ்வேரியை துார்வாரி, சீரமைக்கும் பணியை நேற்று துவக்கினர். இத்திட்டத்தில், துார்வாருதல், கரையை பலப்படுத்துதல், மரச்செடிகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை