மேலும் செய்திகள்
பைக் திருடர்கள் வசமாக சிக்கினர்
01-Jan-2025
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன், 34. இவருக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன .திருவொற்றியூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் தனசேகரன் மறைமலை நகர் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு செய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.நேற்று காலை வேலைக்கு சென்ற தனசேகரன் அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். நீண்ட நேரம் காணாமல் சக ஊழியர்கள் தேடிய போது தண்ணீர் தொட்டியில் தனசேகரன் இறந்த நிலையில் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
01-Jan-2025