உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தனியார் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம்

தனியார் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம்

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆலத்துாரில், சிட்கோ தொழிற்பேட்டை 1982ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இங்கு, 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.இங்குள்ள மருந்து, மாத்திரை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில், 80க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இங்கு ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை இருந்து வந்துள்ளது.இந்நிலையில், தொழிற்சாலை ஊழியர்களுக்கு ஷிப்ட் முறை அமல்படுத்தப்படுவதாக, நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊழியர்கள், 'ஊதிய உயர்வு அளித்தால் தான் ஷிப்ட் முறையில் பணியாற்றுவோம்; இல்லையெனில் பழைய முறையில் வழக்கமான பகல் நேர ஷிப்டில் தான் வேலை செய்வோம்' எனக்கூறி, அலுவலக நுழைவாயில் உள்பகுதியில் போராட்டம் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு காணப்பட்டது. தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார், சம்பவம் இடத்திற்கு சென்று விசாரித்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !