உலக மீனவர் தின விழிப்புணர்வு
மாமல்லபுரம்:உலக நாடுகளில், மீனவர்கள் பாரம்பரிய பழங்குடி மக்களில் குறிப்பிடத்தக்கவர்கள். வாழ்வாதாரத்திற்காக, பாரம்பரிய தொழிலாக, கடல், ஆறு, ஏரிகள் ஆகியவற்றில், மீன் பிடிக்கின்றனர்.அவர்களின் பாரம்பரியம் மற்றும் மேன்மை சிறப்பு கருதி, சர்வதேச மீனவர் தினம், நவ., 21ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளான நேற்று, செங்கல்பட்டு மாவட்ட மீனவர்கள், கடலுக்கு செல்வதை தவிர்த்தனர்.சமூக வலைதளங்களில், இந்நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். சதுரங்கப்பட்டினம் மீனவர்கள், சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர்.