உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிராம உதவியாளர்களுக்கு இன்று எழுத்து தேர்வு

கிராம உதவியாளர்களுக்கு இன்று எழுத்து தேர்வு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 41 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, இன்று எழுத்து தேர்வு நடக்கிறது. கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 41 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பட உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியல் மற்றும் நேரடியாக பெறப்பட்ட விண்ணப்பங்களை கூராய்வு செய்து, ஏற்கப்பட்ட தேர்வர்களுக்கு, இன்று காலை 9:00 மணிக்கு எழுதுதல் திறனறித் தேர்வு நடக்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டங்கள் தேர்வு மையங்கள் திருக்கழுகுன்றம் அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, திருக்கழுக்குன்றம் தாம்பரம் வள்ளுவர் குருகுலம் மேல் நிலைப்பள்ளி, தாம்பரம் வண்டலுார் அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, நந்திவரம் செய்யூர் ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மேல்மருவத்துார் மதுராந்தகம் இந்து மேல் நிலைப்பள்ளி, செளபாக்மல் செளகார் அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளி, விவேகானந்தா வித்யாலையா மெட்ரிக் பள்ளி, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி. மதுராந்தகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை