உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 50 சதவீத மானிய விலையில் தக்கைப்பூண்டு விதை பெறலாம்

50 சதவீத மானிய விலையில் தக்கைப்பூண்டு விதை பெறலாம்

செய்யூர் :செய்யூர் சுற்றுவட்டார விவசாயிகள் 50 சதவீத மானிய விலையில் தக்கைப்பூண்டு விதை பெறலாம் என, வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது. செய்யூர் மற்றம் சுற்றுவட்டாரப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதியில் 30,000 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்தைக் கொண்டுள்ளது. அதிகபடியாக நெல் மற்றும் மணிலா விவசாயம் செய்யப்படுகிறது. விவசாயிகள் சாகுபடியில் இயற்கை உரங்களுக்கு பதிலாக செயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மண்ணின் தன்மை மாறி வருகிறது. இதை தவிர்க்க தக்கைப் பூண்டு விதைகளை விதைத்து 45 நாட்களில் நன்கு வளர்ந்து பூ பூக்கும் நிலையில் செடிகளை அதே நிலத்தில் உழுது உரமாக பயன்படுத்தலாம். இதனால் சூரிய ஒளி மூலம் செடிகளின் வேர்களுக்கு நைட்ரஜன், புரோட்டின் சத்தும் கிடைகிறது. மண்ணின் தன்மை மாறாமல், மண் புழுக்கள் இறக்காமல் உரமாகவும் தலை சத்தாகவும் பயன்படுகிறது. விவசாயிகள் பயன் பெறும் வகையில் தக்கை பூண்டு செடிகள் பயிரிட வேளாண் துறையில் தக்கை பூண்டு விதைகள் 50 சதவீதம் மானியவிலையில் ஏக்கருக்கு 20 கிலோ வழங்கப்படுகின்றன. தக்கை பூண்டு பயிரிட விரும்பும் விவசாயிகள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் நகல், போட்டோவுடன் பவுஞ்சூர், செய்யூர், சித்தாமூர் வேளாண் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என, பவுஞ்சூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ