உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தலைமை போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது

தலைமை போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன், 46. செங்கல்பட்டு போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, பிரபாகரன் பணி முடிந்து, வீட்டிற்கு தன் 'செவ்ரோலெட்' காரில் செங்கல்பட்டு - - காஞ்சிபுரம் சாலையில் சென்றார். செங்கல்பட்டு, ஓசூர் அம்மன் கோவில் அருகில் சென்ற போது, பின்னால் 'ஹூரோ பேஷன் ப்ரோ' பைக் கார் மீது மோதியுள்ளது. இதில், பிரபாகனுக்கும் பைக்கில் வந்த நபருக்கும் ஏற்பட்ட சண்டையில், அந்த நபர் பிரபாகரனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தோர், பைக் ஓட்டி வந்த நபரை பிடித்து, செங்கல்பட்டு நகர போலீசில் ஒப்படைத்தனர். பிரபாகரனை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு, முகத்தில் நான்கு தையல்கள் போடப்பட்டன. இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், பிடிபட்ட நபர் கடலுார் மாவட்டம், மானக்குப்பம் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார், 36, என்பதும், மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. விசாரணைக்குப் பின் வசந்தகுமாரை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை