உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  திருமண ஆசைகாட்டி பெண்ணிடம் ரூ.10 லட்சம் சுருட்டிய வாலிபர் கைது

 திருமண ஆசைகாட்டி பெண்ணிடம் ரூ.10 லட்சம் சுருட்டிய வாலிபர் கைது

தாம்பரம்: திருமணம் செய்வதாக இளம்பெண்ணை ஏமாற்றி, டெபிட் கார்டு பெற்று, 9.80 லட்சம் ரூபாயை சுருட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்துாரை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரரின் 28 வயது மகள், பெங்களூரில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். திருமணம் செய்து வைக்க பெற்றோர் வரன் தேடினர். மேட்ரிமோனி தகவல் வாயிலாக, 30 வயது வாலிபர் பேசியுள்ளார். 'சென்னையில் வசிக்கிறேன். 'நிக்ஸ் குரூப்' என்ற நிறுவனத்தை, துபாய் மற்றும் சென்னையில் நடத்தி வருகிறேன்' என கூறியுள்ளார். பெண்ணின் பெற்றோரை சம்மதிக்க வைத்து, மொபைல் போன் மூலம் பெண்ணிடம் பேசி வந்துள்ளார். இருவரும் இரண்டு முறை சந்தித்தாக கூறப்படுகிறது. தன் நிறுவனத்தின் பண பரிவர்த்தனையை, வருமான வரித்துறை முடக்கி விட்டதால், பணம் கொடுத்து உதவுமாறு வாலிபர் கேட்டுள்ளார். பின், அப்பெண்ணின் டெபிட் கார்டை வாங்கி, அதன்மூலம் சிறுகச் சிறுக, 9.80 லட்சம் ரூபாயை எடுத்துள்ளார். அவரின் நடத்தையில் சந்தேகமடைந்த அப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும், வாலிபர் கூறிய முகவரிக்கு சென்றபோது, அவர் அங்கு வசிக்காதது தெரியவந்தது. அப்பெண், தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, மொபைல் போன் எண், இன்ஸ்டாகிராம் முகவரி ஆகியவற்றை கொண்டு விசாரித்தனர். மேற்கு தாம்பரம், கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்த கோபிநாத், 30; என்பரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ