கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக, தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு 08:00 மணியளவில் மங்கலம், சதுரங்கப்பட்டினம் சாலை மறைவிடத்தில், வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக தகவல் தெரிந்து, சோதனை நடத்தினர். அங்கு கஞ்சா விற்ற செங்கல்பட்டு, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அருண், 23, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 2.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அருணை, நேற்று சிறையில் அடைத்தனர்.