உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பழவேலியில் இரும்பு கம்பி திருடிய இளைஞர் கைது

பழவேலியில் இரும்பு கம்பி திருடிய இளைஞர் கைது

செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பேரின்ராஜ், 43. செங்கல்பட்டு அடுத்த பழவேலி ஜி.எஸ்.டி., சாலையோரம், கடந்த ஐந்து ஆண்டுகளாக 'தாபா' உணவகம் நடத்தி வருகிறார். பேரின்ராஜ் தற்போது, தாபா பின்புறம் உள்ள காலி இடத்தில், புதிதாக வீடு கட்டி வருகிறார். வீடு கட்டுமானத்திற்காக இந்த பகுதியில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து அவர், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்தனர். இதில், இளைஞர் ஒருவரும், சிறுவன் ஒருவனும் இரும்பு கம்பிகளை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மேலும், கண்காணிப்பு கேமராவை பார்த்த சிறுவன், கேமரா உள்ளதாகக் கூறி அலறும் ஒலியும் அதில் பதிவாகி இருந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், இரும்பு கம்பிகளை திருடியது, சென்னை வண்ணாரப்பேட்டை அவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த தீபக்,24, என தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், சிறுவனையும் தேடி வருகின்றனர். தற்போது இந்த காட்சிகள், சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை