போக்சோவில் வாலிபர் கைது
திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றம் அருகில், இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணை அழைத்துச் சென்ற வாலிபரை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.திருக்கழுக்குன்றம் அருகாமை பகுதியைச் சேர்ந்தவர், 17 வயது பெண். திண்டிவனம் அடுத்த, கிடங்கல் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் ஷாம், 22, என்பவருடன், அவருக்கு இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் தொடர்பு ஏற்பட்டு பழகினார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி, வீட்டிலிருந்த பெண்ணை காணவில்லை.இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசில், பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, வாலிபருடன் பெண் சென்றதை கண்டறிந்து, அவர்களை அழைத்து வந்தனர். மாமல்லபுரம் பெண் போலீசார் விசாரணையைத் தொடர்ந்து, திருக்கழுக்குன்றம் போலீசார், நேற்று, போக்சோவில் ஷாமை கைது செய்தனர்.