மேலும் செய்திகள்
மறைமலைநகரில் ஆண் சடலம் மீட்பு
24-Mar-2025
மறைமலைநகர்:கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி, 27. இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், சிங்கபெருமாள் கோவிலில் வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கி, மகேந்திரா சிட்டியில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை, அவருடன் தங்கி இருந்த நண்பர்கள் சென்னைக்கு சென்று விட்டு திரும்பி வந்த போது, வீடு உள் பக்கமாக பூட்டி இருந்தது.இதனால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பாரதி சமையலறையில் துாக்கில் தொங்கியபடி, இறந்த நிலையில் இருந்தார்.இதுகுறித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போலீசார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அருகில் இருந்த பூச்சி மருந்து பாட்டில்களை கைப்பற்றி, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
24-Mar-2025