உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / படியில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு

படியில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு

சதுரங்கப்பட்டினம்,கல்பாக்கம் அடுத்த, நராங்குப்பத்தைச் சேர்ந்தவர் ஞானவேல், 32; சார்ட்டட் அக்கவுன்டன்ட். மனநலம் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.நேற்று காலை 7:30 மணியளவில், இவர் வசிக்கும் வீட்டின் மேல்தளத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்தார்.அங்கிருந்தோர் அவரை மீட்டு, நெய்குப்பியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே ஞானவேல் இறந்ததாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஞானவேலின் மனைவி கீதா, சதுரங்கப்பட்டினம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ