மேலும் செய்திகள்
மீடியனில் மோதி விபத்து சிறுவன் உட்பட இருவர் பலி
20-Mar-2025
செங்கல்பட்டு, மதுராந்தகம் அடுத்த படாளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 24. மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.நேற்று மாலை பணி முடிந்து, தன் 'ஹீரோ ஹோண்டா ஸ்பெளண்டர்' இருசக்கர வாகனத்தில், கருங்குழி பகுதியைச் சோமசுந்தரம், 19, என்பவருடன், படாளம் நோக்கி ஜி.எஸ்.டி., சாலையில் சென்றார்.பரனுார் ரயில்வே மேம்பாலம் மீது சென்ற போது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, சங்கர் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சங்கர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.படுகாயமடைந்த சோமசுந்தரத்தை அங்கிருந்தோர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், சங்கர் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
20-Mar-2025