மேலும் செய்திகள்
மதுராந்தகத்தில் ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு
10-Nov-2024
மதுராந்தகம், மதுராந்தகம் காவல் எல்லைக்கு உட்பட்ட அரையப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரது மகன் ராஜேஷ்குமார், 24.நேற்று, மதுராந்தகம் -- திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையில், அவருக்குச் சொந்தமான 'ஹீரோ ஹோண்டா ஸ்பிலெண்டர்' பைக்கில், அரையப்பாக்கம் நோக்கிச் சென்றார்.அப்போது, அரையப்பாக்கத்தில் திடீரென, நாய் குறுக்கே வந்துள்ளது.இதனால் கட்டுப்பாட்டை இழுந்த பைக், அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இதில், தலையில் பலத்த காயமடைந்த ராஜேஷ்குமாரை அங்கிருந்தோர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ராஜேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்து, மதுராந்தகம் போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Nov-2024